Motivational Stories in Tamil | தன்னம்பிக்கை கதைகள்

சிறகுகள்





டாக்டர் பணியிலிருந்து தன்னுடைய வாழ்வு பிரியும் என்றோ ~ பிரிக்கப்படும் என்றோ 

கனவில் கூட எண்ணியிருக்கவில்லை அவள்.எண்ணியிருந்தால் என்ன ? எண்ணியிருக்காவிட்டால் என்ன? திடீரென்று கண்ட கனவுகள் போல் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது ; ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. 

அவள் காரில் ஏறி சென்றாள் ; மனப்புறா பழைய வானத்தில் பறந்தது . 

இது தான் அவளுடைய  கடைசி வாய்ப்பு என்பதை அவள் நன்கு அறிந்தாள்.

 சிறகை இழந்த பறவை போல

ஒரு நிர்பந்தத்தில்  குடும்பத்தை விட்டு 

தனிமையில் வாழ்ந்துக் கொண்டிருந்தாள். 

, அவளுடைய உறுதியை உடைக்கும்  நாள் வந்துவிட்டது எண்ணி மிகவும் பதட்டமாக இருந்தாள்.


கடந்த ஆறு மாதங்களாக அவள் செய்ததைப் போல  இதுவரை  அந்த மாதிரி  கடுமையாக உழைக்கவில்லை. அவள் நிறைய நுணுக்கங்களை

 கற்றிருந்தாள்  , தன் கடந்த கால தோல்வியின்   அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டவை அவை. அவளைப் பொறுத்தவரை தோல்வி என்பது 

பறவைகள் தன் இறக்கையில் சிறகு இழப்பதை பொருட்படுத்தாமல் இருப்பது மாதிரியான மனநிலையில் இருந்தாள். நாரை மீனின் வருகை எண்ணி தவம் இருப்பது போல அவள் நீண்ட நாள் காத்திருப்பதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.


ஏதோ ஒரு பேனாவுக்கு வேறு ஏதோ பேனா மூடியை பொறுத்த முயல்வது மாதிரி - பழைய வாழ்க்கையில் முடிந்த நிகழ்ச்சிகள் புதிய வாழ்க்கை நெறிகளோடு பொருந்துவது இல்லை .

அவளை பார்த்து அக்கம்பக்கத்தினர் அவளை தவறாகப் புரிந்துகொண்டார்கள் ,  அவதூறாகப் பேசினார்கள் , 

அவளுடைய மனசாட்சிக்கே  சவால் செய்தது, அவள் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய முழுகவனத்தையும் தன் வேலையில் முழ்கினாள்.சமுத்திரத்தில் காலணி எவ்வளவு தான் ஆழத்தில் முழ்கினாலும் , முழ்கிய காலணி

மேலே வருவது மாதிரி பழைய நினைவுகளிலிருந்து  வெளியே வரமுடியவில்லை . அவள் உடைந்து போனாள்.அவள் துன்பப்படுகிறாள் ; சாவல்களை சமாளிக்கிறாள் ; வாழ்க்கையில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் ; வாழ்க்கையும் வாசித்துக் கொண்டிருக்கிறது அந்த வீணையை ; 


 அவள் அந்த வீணையை மையமாகக் கொண்டு ,பாடுபடக் கற்றுக் கொண்டாள்,  தன்னை வீழ்த்தக்கூடிய எல்லாவற்றிலிருந்தும். ஆழமாக மூழ்குவதற்கு பதிலாக, அவள் நீந்த கற்றுக்கொண்டாள். அலைக்கு எதிர்  நீச்சல்.

மனப்புறா மீண்டும் புதிய வானத்துக்கே வந்தது ; யாரோ கார் கதவை திறந்தார்கள். ஒப்பந்தம் ஒப்படைத்தாள், 

புதிதாக அச்சிடப்பட்ட " சிறகுகள்" என்ற புத்தகம்.


 

இது அவள் சிறகடிக்கும் நேரம்.




நன்றி





Post a Comment

0 Comments