வாழ்க்கையில் இழப்பு பற்றிய சிறுகதை | Short stories in Tamil

     இழப்பு        




  
சொட்டுச் சொட்டாய் ஒழுகும் நீர் குழாயின் திருகுபிடியை நன்றாகத் திருகிவிட்டும் கொஞ்சமாகவே துளித்துளியாய் ஒழுகும் நீரை பார்த்து “என்னதான் பைப்போ தெரியல கொஞ்சம் தண்ணீர் கூட அவசரத்திற்குப் பிடிக்க முடியல” என்ற கண்ணீர் கலந்த கரகரத்த குரலில் தனக்குள்ளேயே கூறிக்கொண்டு மீண்டும் நீர்த்திருகுபிடியை நன்றாகத் திருகியதும் ஓரளவு நீரை சிந்திய  நீர்க்குழாயடியில் தண்ணீரை குடத்தில் பிடித்துக்கொண்டிருந்த சாந்திக்கு தன் மன ஆதங்கத்தை யாரிடமாவது கூறித் தீர்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் அங்கலாய்த்தாலும் அவள் தற்போது குடிவந்திருக்கும் முனையூர்க் கிராமத்தில்; அவளுக்குத் தெரிந்தவர்கள் யாருமி;லர்.
சாந்தி காதலித்துத்தான் திருமணம் முடித்தவள் தனது பதினாறு வயதிலேயே தன்னுடன் படித்த குமாரை கைப்பிடித்து ஓடியதால் தாயின் ஒரே மகளாகவிருந்த அவளுக்கு தாய்வீட்டுச் சீதனமான வீடும் கிடைக்கவில்லை, தாயினது பாசமும் உதவியும் கிடைத்ததேயில்லை. குமாருடன் வாடகை வீட்டிலேயே  கல்முனை நகரில் தனது ஒன்பதுவருடங்களைக் கடத்தியிருந்தாள் அவள் வாழ்வில் கண்ட ஒரே ஒரு நிம்மதி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகியிருந்ததுதான்.
 
மூத்த ஆண்பிள்ளை சுதனுக்கு வயது எட்டுத்தான் இருக்கும். தந்தையைப் போல் சாயலிருந்தாலும் தாயைப்போல் குணம் படைத்தவன் என்று அயலவர் கூறியிருந்ததை சாந்தியும் கேட்டிருக்கிறாள். இளைய ஆண்பிள்ளையோ கஜன். வயது ஆறுதான் இருக்கும் தாயைப்போல் சாயலைக் கொண்டிருந்தாலும் தந்தையைப் போல் பிடிவாதக் குணமும் குளப்படியும் அதிகமாகச் செய்பவன். கடைசிப் பெண்குழந்தையான காவியா எட்டு மாதங்களுக்கு முன்புதான் பிறந்தவள் அவளது அழக அனைவரையும் கவரும் வர்ணஜாலம் போன்றதாகும். பார்பவர்களை வசீகரிக்கும் முக அழகும் சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும் அழகும் அக் குழந்தையின் திகைப்பூட்டாத எழிலாகவிருந்தது.
இந்த மூன்று பிள்ளைகளுடனும் ஒரு வாடகை வீட்டில் காலம்தள்ளிய சாந்திக்கு கணவன் குமாரின் அன்பு கிடைத்த காலங்கள் சிலவே. “ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள்” என்பதற்கிணங்க அவளை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புகொள்ளத் தொடங்கிய குமாரை பலமுறை கண்டித்தும் கெஞ்சியும் கேட்காத அவனை மனதாரப் பிடிக்காத சாந்தி தன் பிள்ளைகள் எதிர் காலத்தில் தந்தை இன்றி கஸ்டப் பட்டாலும் பரவாயில்லை என எண்ணி விவாகரத்து செய்யும் முயற்சியில் நீதிமன்றத்தில் முறைப்பாடு  கொடுத்துவிட்டு அவனிடமிருந்து பிள்ளைச் செலவு மாத்திரம் பெற வேண்டி முறைப்பாடு   செய்து அதன் தீர்வுக்காக காத்திருந்த வேளை வாடகை கொடுக்க முடியாதலால் வீட்டை விட்டு வெளியேறி முனையூரிலுள்ள தன் நண்பியின் வீடடிற்கு வந்த முதல் நாள் அது. 
நண்பியின் கணவர்  வெளிநாடு சென்றிருந்ததாலும் நண்பி மகப்பேற்றுக்காய் அவளது தாய் வீட்டிற்குப் போயிருந்நதாலும் சாந்திக்கு தன் நண்பியின் வெறுமையான வீடு தற்காலிகமாக உதவிற்று 
சாந்தி வந்த முதல் நாளே இப்படி நீர் குழாயில் நீர் குறைவாக வந்தது அவளுக்கு மேலும் கோபத்தை தூண்டியது. கோபம் நீர் மேல் அல்ல அவள் கணவன் குமார் மேல்தான் என்பது அந்த நீர்க்குழாய்க்குத் தெரியாதே. பல யோசனைகளுக்கும் மத்தியில் கடவுளால் துடைக்க முடியாத கண்ணீரை தண்ணீராலாவது துடைப்போம் என எண்ணி தண்ணீரை அள்ளி முகத்தை அலம்பிவிட்டு ஒரளவு நீர் நிரம்பிய குறைக் குடத்தை எடுத்துக்கொண்டு சமயலறைக்குள் வைத்தாள்.
 “நேரம் பத்து மணியாகிறதே இன்னும் சமைத்த பாடில்லை........ எவ்வளவு வேலைகள் இருக்கு…. “என தனக்குள்ளேயே அங்கலாய்த்துக்கொண்டு தனது ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து தன் நண்பியின் ஓசி வீட்டிற்குக்; கொண்டுவந்த மூட்டை முடிச்சுகளை விரித்து ஒவ்வொரு பொருட்களாக எடுத்து வீட்டில் வைப்பதற்குள் நேரம் பதினொரு மணியாவிட்டது. “அம்மா எனக்குப் பசிக்கிறது......” என்றான் மூத்த மகன் சுதன்  அவனைக்கண்டு “எனக்கும் பசிக்கிறது அம்மா....” என்றான் இரண்டாவது மகன் கஜன். அவளது இரண்டு மகன்களும் அவ்வாறு கேட்ட பின்புதான் அவளுக்கு நினைவு வந்தது இன்னும் கடையில் வாங்கிக்கொண்டுவந்த காலைச்சாப்பாட்டைக்கூட பிள்ளைகளுக்கு கொடுக்காமல் இருந்துவிட்டேனே என கலக்கத்துடன் எழுந்தாள் 
ஒற்றையடிப் பாதையில் ஊர்தேடும் நாடோடிக்கும்பல் போல ரொட்டிப் பார்சலில் வழிதேடிக்கொணடிருந்த  எறும்புக் கூட்டத்தை தட்டிவிட்டு அதிலிருந்த  ரொட்டிகளைப் பிரித்து அதில் இரண்டை தான் எடுத்துக்கொண்டு மீதி மூன்றையும் மகன்மார் இருவருக்கும் நீட்டலானாள்.
“அம்மா எனக்குத்தான் எல்லாம்...........……இல்லை இல்லை எனக்குத்தான் எல்லாம் ......................எனக் கூறி இரண்டு மகன்மார்களும் அதை வாங்க சண்டை பிடிக்கும்போது “இரண்டுபேரும் சமனாகப் பிரித்துச் சாப்பிடுங்கள்……….. என அதட்டலுடனான குரலில் சாந்தி கூறää சரியம்மா என மூத்த மகன் சுதன் அதை எடுத்து பிரிக்க ஆரம்பித்தான்….
இதற்கிடையில் தனது குழந்தை பசியால் பால்தேடி அழ ஆரம்பித்தது. உணவு  உண்ணும் நிலையில் குழந்தை இருந்தாலும் அதனை தயார்செய்து கொடுக்கும் நிலையில் அப்போது சாந்தி இல்லாததால் அவள் தனது தாய்ப்பாலை கொடுக்க எண்ணினாள். தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தனக்கு தென்பு வேண்டுமே என்பதற்காகத்தான் அந்த இரண்டு ரொட்டிகளையும் தான் எடுத்துக்கொண்டாள் என்பது அவளது இரண்டு மகன்மாருக்கும் தெரியாது.
குழந்தைக்கு பால்கொடுத்தவாறே தனது காலை உணவான ரொட்டிகளையும் உண்டாள். குழந்தையும் பால் குடித்துப் பசியாறியது.  உணவை உண்டு முடித்துவிட்டு சமைப்பதா? அல்லது குழந்தையை குளிப்பாட்டுவதா? என எண்ணியவள் குழந்தையை குளிப்பாட்டியபின்னே சமைப்போம் என தனக்குள்ளேயே ஒரு தீர்மானத்தை எண்ணிக்கொண்டு குழந்தையைக் குளிப்பாட்டும் அகலமான வேசனைத் எடுத்துப் பார்த்தாள். அது அதிக பொருட்களுடன் அவள் கொண்டுவந்த வாகனத்தில் குலுங்கிக் குலுங்கி வந்ததால் அடிப்பாகம் சற்று வெடித்திருந்தது. “ஐயோ ….இது கூட உடைஞ்சிட்டுதோ….என சலித்துக்கொண்டு அதற்குப் பதிலாக தான் நெல் அவிக்கும் பெரிய குண்டாளத் தாச்சியை எடுத்து அதனுள் குழந்தையை குளிப்பாட்ட எண்ணினாள்.
குழந்தையை தூக்கி கொண்டுவந்து தாச்சியில் வைத்து நீர்க்குழாயடியில் தாச்சியினுள்ளே தண்ணீரை ஒழுகவிட்டு குழந்தையைத் தன் கைகளால் பிடித்துக்கொண்டிருந்தாள். தச்சி சரியாமல் இருக்க அடையாக இரு செங்கற்களையும் வைத்தாள். குழாயில் தண்ணீர் சொட்டுச்சொட்டாக வழிந்து கொண்டிருந்தது சாந்திக்கு இன்னும் ஆத்திரமூட்டியது. குழந்தையை  தாச்சியில் வைத்து ஒழகிய நீரை கைகளால் அள்ளி குழந்தையின்மேல் பட விட்டதும் சு10ரியனைக் கண்ட தாமரைபோல் குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.. வழக்கமான பாத்திரத்தைவிட இது உயரமாகவும் அகலமாகவும் இருந்ததனால் குழந்தை மகிழ்ச்சியாக தண்ணீரை அடித்து விளையாடியது ஆனால் சாந்தியோ தண்ணீரை எடுத்து தன் கைகளால் குழந்தையை தடவிக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள். தண்ணீரும் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு ஒத்துழைத்து ஒழுகிக்கொண்டிருந்தது.
அம்மா…….அம்மா……எனக்குப் பாதி ரொட்டிய நல்லா வெட்டித் தரமாட்N;டன் என்கிறான் அண்ணா……….” என இரண்டாவது மகன் கஜன் வீட்டு மண்டபத்திலிருந்து சத்தமிட்டு கத்தினான். “இல்லையம்மா நான் சரியாத்தான் வெட்டுறன்” எனக் கூறி கூரிய கத்தியை கையில் எடுத்து வைத்திருந்த ரொட்டியை சமபங்காகப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான் மூத்தவன் சுதன். அதனைப் பறிக்கும் முயற்சியில் இருந்தான் இரண்டாமவன் கஜன். இவர்கள் இருவரும் தனது ஒவ்வொரு ரொட்டியையும் சாப்பிட்ட பின்னர் மீதியாயிருந்த ஒரு ரொட்டியை சமனாகப் பிரிப்பதில் சண்டையிடுகிறார்கள் என்பது சாந்திக்கும் தெரியும் அதனால் “இருங்க வாறன் இரண்டுபேருக்கும் அடி தரப்போறன்.....” என அதட்டலான குரலில் பதில் கூறலானாள். 
சிறிது நேரம் கழித்து குழந்தையின் இடுப்பு நனையுமளவு தண்ணீர் வர குழந்தையை அமர்த்தி வைத்து குளிப்பாட்டிய சாந்திக்கு தனது வீட்டு மண்;டபத்திலிருந்து இரு மகன்களும் சத்தமாக சண்டை செய்யும் குரல் கேட்டது.  சற்று தலையை திருப்பி வாசற் கதவினூடாக நோட்டமிட்டாள்.  
ரொட்டி  வெட்ட வைத்திருந்த கத்தியை பறித்துக்கொண்டு இரண்டாவது மகன் கஜன் சுதனை நோக்கி வீசி வீசி இருக்க  சுதனோ தும்புத்தடியை எடுத்து அவனுக்கெதிராக வீசிக்கொண்டு “அம்மா....அம்மா.............இவனைப் பாருங்க.....” என சத்தமிட்டுக்கொன்டிருந்தான். எதிர்பாராத விதமாக கஜனின் கையிலிருந்த கத்தி வீசுண்டு சுதனின் கழுத்தில்பட்ட அந்தக்கணமே “ஐயோ...........அம்மா என அலறியவனின் குரல் கேட்டு இடியோசை கேட்ட நாகம் போல ஓடினாள் தாய் சாந்தி. 
அங்கே கழுத்தை பொத்திக்கொண்டு விழுந்த சுதனை கண்ட அவளுக்கு கோபம் அதிகரித்து. அவன் தம்பிக்கு அடி வாங்கிக் கொடுப்பதற்காக அவ்வாறு விழுந்து நடிக்கிறான் என்ற நிலையைத் தாண்டியிருந்ததை எண்ணி  “ஏன்டா அவனுக்கு கத்தியால் வீசினாய் என சீற்றத்துடன் மற்ற மகனைத் துரத்தும் முயற்சியில் சாந்தி இருந்தாள். “இல்லையம்மா அவன் சும்மா சொல்றான் ....”நான் மெதுவாத்தான் வீசின....” என வீட்டுக்கடைவாயிலை நோக்கியவாறு ஓடினான் கஜன்;.
தாய் சாந்திக்கு ஏற்கவே தன் கணவனால் நோவுற்றிருந்த அவளுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல கோபம் இன்னும் அதிகரித்து அவனுக்கு இரண்டு அடி போடாவிட்டாள்  தனது ஆதங்கம் தீராது என எண்ணி ஆதங்கங்கொண்டு அவனை வேகமாகத் துரத்தினாள்.
 
தன் தாயிடமிருந்து ஒரு அடிகூட படக்கூடாது எனஎண்ணி வளவின் வாசற்படியைத் தாண்டி கடப்படியை கடக்க முயன்றவேளை அவ் ஒழுங்கையில் ஒரு குடும்பத்தை இறக்கிவிட்டு எதிர்பாராமல் சென்ற ஒரு முச்சக்கர வண்டி சட்டென்று கஐனை பலமாக மோதித் தூக்கி வீசியது. இங்கு எதிர்பாராமல் நடந்த அகோர விபத்தைக் கண்டு அவனை துரத்திய தாய் சாந்தி திகைத்துப்போனாள்.
தன் கன்னங்களில் இரத்தத் துளிகளை தடவிப் பார்த்த சாந்திக்கு மனம் பதைபதைத்தது  அவனுக்கு அடிக்க வந்தவள் மலைத்துப்போய் அவனை ஓடிச்சென்று தூக்கினாள்.
உணர்வற்ற நிலையில் தலையிலிருந்து இரத்தவெள்ளம் பெருக்கெடுத்தது “ஐயோ என் மகனே .......என அவள் அலறிய அலலறைக் கேட்டு அவளுக்கு உதவி செய்ய அயலவரும் இல்லை. அவள் உதவிகேட்கவும் அவளுக்கு இங்கு யாரையும் தெரியாது.
தான் செய்த விபத்தை மனிதாபிமானத்துடன் ஒப்புக்கொண்ட முச்சக்கரவண்டிச் சாரதி “அக்கா..... அக்கா........பிள்ளையை ஏற்றி என் ஆட்டோவிற்குள் இருங்க....நாம்; உடனே ஆஸ்பத்திரிக்குப் போவோம்...என தான் செய்த பாவத்திற்கு பரிதாபம் தேடும் பக்தன்போல் தயங்கி கெஞ்சி நடுநடுங்கி நின்றான்.
செய்வதறியாத சாந்தியும் தன்மகனை முச்சக்கரவண்டியில் ஏற்றியதும்  சாரதி வண்டியை செலுத்த வண்டி வேகமாக வைத்தியசாலைக்கு விரைந்துகொண்டிருந்தது. 
தன் மகனை மடியில் தாங்கிக்கொண்ட சாந்தி  அவன் சுயநினைவிழந்து கிடந்த நிலையை கண்டு அலறினாள். அவனது தலையில் ஒழுகிய இரத்தம் அவள் அணிந்திருந்த வெள்ளை நிற நீள்சட்டையை சிவப்பு நிறமாக நனைத்தது. எவ்வளவு தடுத்தும் தலையிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது..” ஐயோ ......கொஞ்சம் விரைவாகப் போங்க”..... என சாரதியைப் பார்த்து அலறலுக்கு இடையில் புலம்பினாள். 
கொஞ்சம் தூரமாகவே வைத்தியசாலை இருந்ததால் அரை மணித்தியாலங்கள் ஆட்டோ பயணித்து வைத்தியசாலையை அடைந்தது. பிரசவம் கண்ட பிள்ளையைக் காணச் செல்லும் தாய்போல் வைத்தியரை அலறியடித்துக்கொண்டு அழைத்ததும் வெளி நோயாளர் பிரிவிலிருந்த ஊழியர்கள் ஓடிவந்து “சக்கர நாற்காலியில் தன் மகனை தூக்கி வைத்து அவசர தீவிர சிகிச்சைப்பிரிவுக்குக் கொண்டு சென்றனர். 
வைத்தியர் உடன் விரைந்து வந்து பையனின் நிலையை பரிசோதித்து விட்டு உடனே தாய் சாந்தியை நோக்கி “உங்க.....உங்க....மகன் இரத்தம் அதிகமாகச் சென்றதனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டார்....” எனக் கூறி முடிக்கும் முன்பே கூக்குரலிட்டு அழுதாள் சாந்தி.....”என் மகனை நானே கொன்றுவிட்டேனே ....கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது........ஐயோ......என அலறிய அவளுக்கு “மகனின் பிரேதத்தைக் கூட உடனே தர முடியாது பிரேத பரிசோதனையின் பின்னரே தர முடியும்”..... என்ற வைத்தியரின் வார்த்தை நெஞ்சில் நெருப்பை வீசியது.... அவளுக்கு கனல் கொண்ட நெஞ்சில் அனல் அள்ளிப் போட்டது போல இருந்தது.
அவளின் தவிப்பின் இடையிடையே ஏதோ ஒரு ஞாபகம் அவளை வாட்டியது அது என்ன என்று நினைவு கூர்ந்த அவள் இடிந்து போனாள். தனது ஏனைய இரண்டு பிள்ளைகளையும் அவள் அப்போதுதான் நினைவுகொண்டாள். அவள் தலையில் இடி விழுவது போல் இருந்தது. ஜயோ......என் பிள்ளைகள் ஜயோ......என் பிள்ளைகள என அழுது புலம்பிக்கொண்டே ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி நடந்தாள். 
“தனக்கு ஏதோ நடந்துவிடும்” என்ற பயத்திலேயே வந்த முச்சக்கரவண்டிக்காரனும் யாருக்கும் தெரியாமல் நழுவிற்றான். வெளியில் வந்த சாந்திக்கு உதவும் நிலையில் யாரும் இல்லை. 
வீட்டு நிலையை அறிய அவளை ஏற்றிக்கொண்டுபோகும் மனநிலையிலும் யாருமில்லர். ஓட்டமும் நடையுமாக பிரதான வீதியில் சென்ற அவளின் கோலத்தை கண்டு விதை நெல் ஏற்றி வந்த மாட்டுவண்டிக்காரன ஒருவன் மனமிரங்கி; தன் வண்டியில் ஏற்றிக்கொண்டான். வண்டியும் விரைந்ததுää அவள் பதட்டமும் தொடர்ந்தது.
 
அவள் குடியேறிய ஏரியாவில்தான் அவ் வண்டிக்காரரனும்; வயல் செய்கிறான். வண்டியில் ஏறிய அவளுக்கு மனம் பதைபதைத்தது அழுதாள்.....ää ஓ....வென்று கண்ணீர் விட்டு அழுதாள் அவளிடம் எதுவும் கேட்க வண்டிக்காரணுக்கு தோன்றவில்லை ஏனெனில் அவளின் கண்ணீர் ஏதோ சோகத்தை பிரதிபலித்ததால் வேகமாக வண்டியை செலுத்தினான். 
கரடும் முரடும் நிறைந்த பாதையிலே கட.......கட.......என வண்;டிச் சில்லுகள் புரண்டன. அவள் மனதில் உள்ள இருள் போல் வானமும் இருண்டது. தன்நிலமை எ;ண்ணி தனது மீதி இரண்டு பிள்ளைகளையாவது காப்பாற்றலாம் என்ற மனப்போராட்டதின் விளிம்பில் நின்ற சாந்திக்கு வீட்டுக்குப்போகும் சிற்றொழுங்கை நெருங்கியவுடன் தன்னிலை மறந்து நிறுத்துங்கள்...........நிறுத்துங்கள்......... என உரத்துச் சத்தமிட்ட சத்தத்தில் மாடுகளே அதிர்வுற்று நிற்கலாயின. வண்டிக்காரன் திகைத்துப்போய் நின்றான். அவள் இறங்கி ஒழுங்கை வழியே வீட்டுக் கடவாயிலை நோக்கி ஓடினாள். 
அன்றைய நாள் கதிர்காமத்  தீர்த்தநாள் என்ற படியால் அவ் ஒழுங்கை சனநடமாட்டமே இல்லாமல் இருந்தது. தன் வீட்டு வாயிலில் நாய் ஒன்று ஊளையிட்டுக்கொண்டிருப்தைக் கண்ட சாந்திக்கு இன்னும் பதட்டம் அதிகரித்தது..”கடவுளே என் இரண்டு பிள்ளைகளுக்காவது ஏதாவது நடந்திருக்கக் கூடாது அப்படி நடக்காமலிருந்தால் நான் உனக்கு உன் சந்நிதிக்கு வந்து உயிருக்கு உயிராக ஆடு நேர்த்தியாகத் தருவேன்” என கதிர்காம முருகனுக்கு மனதிலேயே நேர்;த்தி வைத்துக்கொண்டே வாசற்படியைத் தாண்டினாள்.
  வீட்டை சுற்றுமுற்றும் உற்றுப் பார்த்த அவளது கண்கள் மண்டபத்தில் இருந்த மூத்த மகனின் பக்கம் திரும்பியது. வீட்டு மன்டபத்தில் ஏதோ ஒரு ஜீவராசி அசைந்துகொண்டிருந்தது அவளுக்குத் தெரிந்தது...........கண்களை நன்றாகக் கசக்கிப் பார்த்தாள் சாந்திää ஆனால் அது மனிதனல்ல நாய் என்பதை அவள் அருகில்போய்ப் பார்த்த பின்புதான் அறிந்தாள்;. மண்டபம் முழுதும் இரத்தம் உறைந்திருந்தது. அவற்றில் சிலவற்றை நக்கிய நாய் அவளைக் கண்டவுடன் விலகி ஓடியது.
கண்கள் பிதுங்க நெஞ்சைப் பொத்திக்கொண்டு உணர்வற்றுக்கிடந்த தன்மகனை அள்ளி எடுத்தாள் சாந்தி. மகன்; முதலில் விழுந்துகிடக்கும்போது கத்தி இலேசாகத்தான் வெட்டிவிட்டதுää அல்லது சும்மா மகன் பாசாங்கு செய்கிறான் என்ற எண்ணத்தில் இருந்த சாந்திக்கு இது திகைப்பூட்டியது. 
தன் மகனின் கழுத்தில் ஆழமாக கத்தி பாய்ந்திருந்ததால் அவ்வளவு நேரமும் துடிதுடித்துக்கொண்டிருந்த அவன் ஆவியும் அப்போதுதான் அடங்கியிருந்தது. அலற நினைத்த அவளுக்கு அடித்தொண்டை குரல் மாத்திரம் அலற ஒத்துழைத்தது. மகனைப் பார்த்த அவளுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது.
வானம் இருண்டு மழையைப் பொழிய ஆயத்தமானதும் அவளுக்கு தனது கடைசிக் குழந்தை காவியாவின் ஞாபகம் வர “நெருப்பில் பட்ட கை போல்”; திடுக்கென எழுந்து நீர்க்குழாயடியை நோக்கி ஓடினாள் அங்கே  செங்கல் அடை கொடுத்து வைத்திருந்த அகன்ற குண்டாளத்தாய்ச்சி நீர் நிரம்பி வழிந்து நெடுநேரமாக ஓடிக்கொண்டிருக்கிறதை கண்ட அவள் “ஜயோ.............என் குழந்தை காவியா என அலறியடித்துக்கொண்டு ஓடினாள். 
இறுதிக் கட்டத்திலாவது தன்; அம்மா வந்து தன்னைக் காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டிருந்த அக்குழந்தையின் நம்பிக்கை “இலகு காத்த கிளியின் கதைபோல்” இழக்கப்பட்டு குழந்தை நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்து கிடந்தது. அதிகளவு நீர் குடித்து மூச்சுத்திணறியதால் வயிறு வீங்கியிருந்தாலும் முகம் “அமாவாசை இருளில் மறைந்த சந்திரன்போல்” அழகிழந்து வாடியிருந்தது. பிஞ்சுக் கைகள் இரண்டும் பலத்த போராட்டத்தில் நீரில் ஈடுபட்டு பலமிழந்து வீழ்ந்திருந்தது. குழந்தையை நீரிலிருந்து எடுத்த தாய் சாந்திக்கு அழுவதற்கு தொண்டை இல்லைää புத்தி பேதலித்ததுப் போய்விட்டதுää நிதானமிழந்தாள்ää பலமிழந்தாள்ää.......... வானமே தலையில் இடிந்து விழுந்தாற்போல் தரையில் சாய்ந்தாள். 
வைத்தியசாலையில் ஓருயிர்;ää மண்டபத்தில் மறுவுயிர்;ää மடியில் ஒரு உயிர் என முத்துக்கள் மூவரையும் பறிகொடுத்த அவள் பேதலித்துப்போய் மண்ணில் சாய்ந்தாள். அவளுக்காக ஆறுதல் கூற முனையும் வகையில் நன்றியுள்ள ஜீவன்களான நாய்கள் மட்டுமே சுற்றி வளைத்துக்கொண்டு  வாலை வாலை ஆட்டுகின்றன.  வானம் அவளுக்காக இடி மின்னலுடன் சத்தமிட்டு அழுகின்றது.   
.............முற்றும்.........
.     












அ.சுதர்சன்


Post a Comment

0 Comments