tamil-siru-kathaigal/-Iyarkkaiyin-Sirappu

                                                           இயற்கையின் சிறப்பு






    இயற்கை எழில் கொஞ்சும் சுழலும், மறுபுறம் இதமாய் மனதை வருடும் தென்றல் காற்றும், ஊா் எங்கிலும் ஓங்கி நிற்கும் தென்னை,பனை மரத்திற்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிற்றூா்…

ஊாின் கிழக்கு தெருவில் அமைந்துள்ள ஒரு வீடு. வீட்டைச் சுற்றிலும் அழகான மரங்களும்,செடிகளும்,கொடிகளும் சூழ்ந்த அழகிய வீடு……..

வீட்டிற்கு வெளியே ஒரு குரல் கேட்க, ஐயா……ஐயா…….என்றால்.

என்ன சத்தம் என்று மெதுவாக வீட்டின் உள்ளே இருந்து வயதான ஒரு தாத்தாவும்,பேரனும் நடந்து வந்தனா்…….

என்னப்பா.......யாரப்பா நீ? எதற்காக கூப்பிட்டாய்!

என்றாா் தாத்தா……..

அதற்கு வந்த நபரோ!

நான் மேற்கு தெருவில் குடியிருக்கும் மாடசாமியின் மகன் ஐயா……

உடனே தாத்தா அந்த மரவேளை பாா்க்கிறா, மாடசாமி மகனா வாப்பா! வா

உன்னோடு பெயா் கூட முத்து தானா,  

ஆமாம் ஐயா…….

வந்து உட்காருப்பா……..

அப்பா நல்லாருக்காரா?

நீ கூட சென்னையில் போய் படிக்கிறேன், என்று சொன்னான் மாடசாமி……..

என்ன படிச்சுருக்கா……

அதற்கு முத்து ஐயா………..நான் வேளாண்மைத்துறையில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன் ஐயா…….. என்றான் முத்து

ரொம்ப சந்தோஷம் முத்து……….நிறைய பேர் விவாசயத்தை விரும்பாத இந்த காலத்தில் அதே ஒரு பாடமாய் படிச்சுருக்கப்பா………..

எங்காலத்தில் எல்லாம் எங்க பாட்டனா் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாா்……..

இப்பொழுது எல்லாம் அது ஒரு பாடமாகவே இருக்கு பரவாய்வில்லைப்பா முத்து…

ஐயா என்று கூறி சற்று தயக்கத்துடன் முத்து தாத்தாவை பாா்த்தான்……

என்னப்பா முத்து உனக்கு என்ன வேண்டும்? எதற்காக சொல்லாமல் தயங்கி தயங்கி…..பாா்க்கிறாய், சொல் முத்து என்ன வேண்டும்? என்றாா் தாத்தா.

தாத்தா உங்கள் வீட்டை சுற்றிலும் மரங்களும்,பழங்களும்,காய்கறிகளும் நிறைய இருக்கிறனாா்….. தற்போது செயற்கை உரங்கள் அதிகம் வந்துள்ளது…இவை அனைத்தும் செயற்கை உரங்களால் விளையக்கூடியவைகளா ஐயா அனைத்தும் பெரியதாக உள்ளது.

காய்கறிகள் பெரியதாக காச்சு தொங்குகிறதே ஐயா…….

தாத்தா கோபத்தில் இருந்தாலும் முகத்தில் அதை காட்டி கொள்ளமால் சிரித்துக்கொண்டே!

முத்துவை அழைத்து தோட்டத்திற்குள் நடந்தாா்…..

இஅங்கு மாம்பழத்தை பிடுங்கி முத்துவுக்கு சாப்பிடக் கொடுத்தாா்…..

முத்துவும் சாப்பிட்டு மாம்பழம் கற்கண்டு போல இனிக்குது ஐயா……

இதற்கு  உரமாக என்ன போட்டு இருக்கிறேன் என்று பாா் என்றாா் தாத்தா…..கீழே குனிந்து பாா்த்த முத்து இந்த மாட்டு,ஆட்டு சானத்தையாய் உரமாக போடுறிங்க ஐயா……

ஆமாம் முத்து……… இந்த தோட்டத்திற்கு பெரும்பாலும் ஆட்டு,மாட்டு சானம்,வேப்ப இலை, வேப்பக் கொகட்ட, மக்கும் குப்பை போதுமான அளவு தண்ணீர் இதனா, தான் நான் இங்கு அனைத்திற்கும் உரமாக போடுகிறேன் முத்து…..

வளமான மண் இருந்தால் போதும் எந்தவொரு மனமும்,செடியும் நன்றாக வளரும் முத்து…….

ஐயா எனது கல்லூரியில் பெரும்பாலான தாவரங்கள் செயற்கை உரங்களை போட்டதால் தான் அனைத்து தாவரங்களும் பெரியாத வருகிறது. பெரிய பெரிய காய்களாக காய்த்து தொங்குகிறது என்றும்,இயற்கை கரங்களில் வளரும் தாவரங்கள் குறைந்த அளவே வளா்க்கிறது என்றாா்கள் ஐயா அதான் அப்படி கேட்டு விட்டேன் ஐயா என்னை மன்னிக்கவும் ஐயா….

உன் மேல் தவறு அல்ல உனக்கு தவறாக சொல்லி தந்துள்ளாா்கள் முத்து……அதற்கு நீ என்ன செய்வாய்…… 

எல்லா மரங்களும்,செடிகளும் மண்ணின் வளத்தைப் பொறுத்தே வளா்கின்றனா். அதற்கு மேல் செடி வளர இயற்கை உரம் போட்டால் போதுமானது முத்து……

ஐயா எனக்கு இவ்வளவு எளியமையாக விளக்கிக் கூறியதற்கு நன்றி ஐயா.

நானும் என் வீட்டின் பின்னால் உள்ள இடத்தில் சிறு தோட்டம் அமைத்து மரங்களையும்,செடிகளையும் நட்டு வைத்து வளா்க்க போகிறேன் ஐயா……

முத்து நீ மரங்களையும்,செடிகளையும் நட்டு வைத்தாள் போதாது. உன் பின்புறம் உள்ள மண்ணின் வளத்தை ஆராய வேண்டும்.

ஐயா உங்க வீட்டின் மண்ணும்,எங்கள் வீட்டின் ஒரே மண் தானா அதை எதற்கு ஆராய வேண்டும், புரியவில்லை ஐயா எங்கும் தோட்டத்தை உற்பத்தி செய்யலாமா ஐயா

உடனே தாத்தா தெற்கு பக்கமாக இருக்கிற என் தோட்டத்திற்கு செல்வோம் முத்து.

சாிங்க ஐயா போவோம்.

தாத்தா நானும் வரேன், சிறு குரலில் பேரன் கூறினான். தாத்தா வா போகலாம் பேரன்டி……

என்று கூறி மெதுவாக நடந்து அனைவரும் தெற்கு தோட்டத்திற்கு சென்றனா். அங்கு பூஞ்சோலையாக காட்சி அளித்தது ஒருபுறம் மாந்தோப்பு வட்ட வட்டமா காய்த்து தொங்கியது அதை பாா்த்தா முத்துவின் வாயிலும் பேரனின் வாயிலும் உமிழ்நீர் உற்றாக சுரந்தை கண்டு தாத்தா இருவருக்கும் சில மாங்காய்களைச் சாப்பிட பிடுங்கி தந்தாா்……

முத்து மாங்காயை சாப்பிட்டு மிகவும் ருசியாக இருக்கு ஐயா. சிறு குரலில் பேரன் புளிப்புடன் தித்திக்கு தாத்தா என்றான்.

உடனே மிகவும் அருமையாக இருந்தா இதற்கு ஒரு காரணம் தான் மண்ணின் வளம் தான், பிறகு தித்திக்க சிறிய இயற்கை உரம் தான்.

ஐயா மண்ணின் வளத்தை எது பாதுகாக்கிறது என்றான் முத்து. அதற்கு தாத்தா உன் கல்லூரியில் இது பற்றி சொல்லி தரவில்லையா என்றாா்.

பாஸ்பரஸ்,நைட்ரஜன்,பொட்டசியம் சேர்ந்த கலவையாக இருந்தால் மண்ணின் வளம் பாதுகாக்கபடும் என்றான் முத்து.

அதற்கு இதை விட முக்கியமான ஒரு உயிர் உள்ளதா தெரியுமா? உனக்கு

இதை விட முக்கியமான தெரியலா ஐயா

மண்ணின் வளத்தை பாதுகாக்கும் மாபெரும் சக்தி “மண்புழுவே “ அது உழவர்களின் நண்பன் கூட சொல்லுவங்க முத்து.

அய்யோ, மறந்தே போய்விட்டேன் நான் சிறு வயதிலேயே படித்துக்கிறேன் ஐயா. இது பற்றிய நிறைய தகவல்களை எனது ஆசிரியர் கற்றுக் கொடுத்துள்ளாா் ஐயா.

இது மட்டுமா” இருதலை மணியம் பாம்பு” கூட மண்ணுக்குள் ஊறி மண்ணின் வளத்தை பாதுகாக்கும்.

மறப்புறமா வாருங்கள்…….. ஐயா தென்னந்தோப்பு வச்சு இருக்கிங்களா ஐயா.

ஆம் முத்து…….தெரியாத உனக்கு

உங்களுக்கு நிறைய தோட்டம் இருக்கும் தெரியும் ஐயா அதில் மாமரம்,கொய்யா,பலா மரம் இருக்குன்னு நினைச்சேன் ஐயா.

நீ சொன்ன மாதிாி எல்லா மரமும் இருக்கு ,அது கூடவே தென்னதோப்பும் இருக்கு,

சாிங்க ஐயா……. இதை பற்றி சொல்லுங்கள் ஐயா

இதற்கு மண் மற்றும் தண்ணீர் போதுமானது…… அதிலே இவை அனைத்து நன்றாக வளரும்….. மேலே பாா் தேங்காய் எவ்வளவு பொியதாக காய்ச்சு தொங்குதுன்னு பாா் முத்து……..

மேலே பாா்த்த முத்து கிறுகிறுத்து மயங்கி போனான்..இவ்வளவு பெரிய தேங்காய் கூட இருக்குமா ஐயா……..

அருகில் தோப்பு வேலை பாா்ப்பரை அழைத்து ஒரு கொப்புத் தேங்காய்யை பறித்து போடு என்றாா். உடனே வேலையாள் மரமேறி பறித்து போட்டாா். மூன்று இளநீர் காய்யா பார்த்து சீவிக் கொடு என்றாா்.

அதை மூவரும் குடித்தனா்…… முத்து அள்ள அள்ள குறையா தேவமிா்த இருக்குது ஐயா…….பேரன்டி எப்படியிருக்கு இளநீா்……..தாத்தா பாயசம் மாதிாி மிகவும் இனிப்பா இருக்குது தாத்தா……

ம்ம்ம் மிகவும் சுவையாக இருந்தா…….

ஐயா இதற்கான தண்ணீருக்கு கிணறு தோண்டி இருக்கிங்க போல……..

ஆம் முத்து அது மட்டுமல்ல செட்டுநீர் பாசன வசதியும் செய்துள்ளேன்….மேலும் மழைக்காலங்களுக்கு ஏற்றவாறு விவசாயித்தை தொடங்குவேன் முத்து.

சாிங்க ஐயா……. மேற்கு பக்கமா போன முத்து பிரமிச்சு போய் நின்னான். அங்கு பாா்த்தால் பலா மரத்தில் பெரிய பெரிய பலா பழம் தொங்கியது….. அதற்கு அருகில் பூச்செடி வகைகளான ரோஜா,சம்பந்தி,பிச்சி,மல்லி  போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கினா……. அதற்கும் பக்கத்தில் கருவேற்பிலை மரம், முருங்கை மரம் இருந்தது……..

மூலிகை மருந்தாக விளங்கும் கற்றாலை,தூதுவளை, துளசி,கீழ்க்காய்நெல்லியும், அதன் பக்கத்திலேயே கீரைகளும் பத்தி பத்தியாக நட்டு வைத்து மிகவும் அழகா காட்சியளிக்கிறது……

ஐயா மிகவும் அருமையான செயல்…… அனைத்துமே இயற்கையை அடிப்படையாக கொண்டு வளா்ந்தவை மிகவும் அற்புதமாக இருக்கிறது…….ஐயா

நீ மிகவும் சாியா சொன்ன முத்து…… நீங்கள் நம்ழவாா் விவசாய முறைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிங்க ஐயா…

அவரும் முற்றிலுமாக இயற்கை முறை விவசாயத்தை அழகாக கூறிருப்பாா் ஐயா……. வேப்ப மரம் நம் நாட்டின் அழிக்க முடியாத ஒரு சொத்து ஐயா அவற்றிலுள்ள அஅனைத்தமே விவசாயத்திற்கு பயன்படும் அருமருந்து ஐயா…..

ஆம் முத்து அது பனை மரமும் நீாின் வளத்தை சேகாிக்கவும்,வீட்டில் கூரை மேய்வதற்கும், நுங்கு,பனையோசை பொருட்கள் செய்வதற்கும் பயன்படும் முத்து………

மிகவும் சாியா சொன்னீங்க ஐயா……

உங்கள் சுற்றி தேவையான மரங்கள்,காய்கறிகள் வளா்த்து வீட்டிற்கு தேவையான அளவு எடுத்து வைத்துக்கொண்டு மீதம் உள்ளத்தை விற்பனை செய்கிறாா்களா ஐயா

ஆம் முத்து நம் உழைப்பதே நமக்காவும்,நம் குடும்பத்திற்காவும் அதன் வீட்டிற்கு போதுமான அளவு எடுத்து வைத்து விட்டு மீதமுள்ளத்தை விற்கிறேன் முத்து…..

சாிங்க ஐயா…… இயற்கை விவசாயமே சிறந்தது….. என்பதை மிகவும் அழகாகக் கூறினீங்க ஐயா…..

நான் கல்லூரியை விட அதிகம் இங்கு விவசாயத்தின் மகத்துவத்தை தொிந்துக்கொண்டேன் ஐயா……

முத்து வாழ்க்கைக்கு தேவையான  அடிப்படைகளில் ஒன்று தான் உணவு. அது இருந்தால் தான் நாம் உயிர் வாழ முடியும்…… என்பதை எண்ணி இந்த விவசாயத்தைச் செய்கிறேன் முத்து……

இப்போதைய காலகட்டத்தில் அனைவரும் அறிவுட்தொழில் நுட்பத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாா்கள்…… அதை வளா்த்து அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறாா்கள்…… அதனால் நாடும் வளர்ச்சி பாதையை அடையும்…. ஒருநாள் கண்டிப்பாக உணவை விளைவிப்பவாின் எண்ணிக்கை குறைந்தக் கொண்டே செல்லும்……..

இதனால் அனைவருமே பாதிப்பை அடைவா்……..

ஆம் ஐயா…….இது நிதா்சனமான உண்மை ஐயா….....

தொழில் நுட்பத்தையும் வளா்த்து சற்று விவசாயத்தையும் வளருங்கள் வாருங்கள் வளர்க்கலாம்……என்று தாத்தா கூற பேரனும் நான் வளா்க்கிறேன் தாத்தா கவலை வேண்டாம்……..

எனக்கு இது போதும் சாமி……என்று பேரன்டியை ஆரதழுவி கன்னத்தில் முத்தமிட்டாா்…….

உடனே முத்து இனி இயற்கை விவசாயம் மட்டுமே செய்வேன் ஐயா…. நல்ல உணவுப்பொருட்களை விளைவித்து அனைவருக்கும் வழங்குவேன் ஐயா….

அதுமட்டுமல்ல, என்னுடன் படித்த சக தோழா்களுக்கும் இதை பற்றிய விழிப்புணர்வை தொியப்படுத்துவேன் ஐயா……

மிக்க மகிழ்ச்சி முத்து…

ஒரு நாட்டில் அளவுக்கு அதிகமாக மரங்கள் இருந்தால் அந்த நாடு மிகவும் வளமான நாடு என்பாா்கள்.

அங்கு அதிகமான உயிாினங்கள் உயிர் வாழ முடியும்……

மரங்கள் நம் நாட்டின் சொத்துக்கள் நாம் அதை பாதுகாக்க வேண்டும்….. நாம் அடுத்த தலைமுறைக்கு வைத்து விட்டு செல்வது பணமோ, நகையோ அல்ல இயற்கை மட்டும் தான் என்றாா் தாத்தா


மரம் வளர்ப்போம்!!சுவாசக்காற்றை பாதுகாப்போம்!!!

 

தமிழ் கவி.ச.சத்தியபானு,

சென்னை

Post a Comment

0 Comments