bhakti kathaikal | பக்தி கதைகள்

அலைகளுடன் சிவலோக பயணம்









ஒரு கடலோரத்தில் காதல் ஜோடிகளின் கூட்டம் பார்க்கும் இடமெல்லாம் பறவையின் சிறகுகள் போல பரவசமாக பறந்து காணப்படும் அக்காதலர்களின் ஒரு கூட்டத்தில் தனிமை காதலனாக கனவு காணும் ஒரு ஆண்!...

தன் கனவை நிறைவேற்ற வழி தெரியாமல் தவித்து நிற்கும் அவன்,யாரிடம் வழி கேட்க போகிறான்… என்று உங்களுக்கு தெரியுமா? வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். வாருங்கள் இச்சிறு கதையின் மூலம் அவன் கனவு நிறைவேறுமா? நிறைவேறாதா? என்று காண்போம்.  

ஒரு நாள் எப்போதும் போல தன் கனவை நினைத்து பல யோசனைகளுடன் கடற்கரையோரம் அத்தனிமை காதலன் அமர்ந்தான். திடீரென ஒரு சத்தம் யாரோ அவனை அழைப்பது போல… அச்சமுற்று முன்னும் பின்னும் சுற்றி பார்க்கிறான்.

அங்கே காதல் ஜோடிகளும் இல்லை, கடலை விற்பவர்களும் இல்லை. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வீடு திரும்ப முயன்றான்.

பயப்படாதே தனிமை காதலா!.. நான் தான் கடல் அலை பேசுகிறேன் என்று ஒரு குரல் அவன் காதின் வழி பாய்ந்தது. உடனே அவன் கனவு கனவு என்று நாம் யோசித்து ஒரு  வேளை பைத்தியம் ஆகிட்டோமோ என்று நினைத்து தன் மனதிற்குள்ளையே புலம்பல் செய்கிறான். இது ஒன்றும் பொய் அல்ல …நீ காண்பதெல்லாம் உண்மை தான் என்று கூறுகிறது கடல் அலைகள்.

என்று சொல்லி விட்டு அவனிடம் உன் கனவுகளை என்னிடம் சொல் என்னால் முயன்ற உதவியை நான் உனக்கு செய்கிறேன் என்று கூறியது கடல் அலைகள். அத்தனிமை காதலனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கிறான்.

இந்த காலத்தில் மனிதர்களே ஒருவருக்கொருவர் உதவி செய்ய முன் வருவதில்லை, இதில் நீ எப்படி எனக்கு உதவி செய்வாய் என்று வினா எழுப்பினான்.

உடனே அலைகள் நீ ஒன்று என்னிடம் சொல் அது  என்னால் முடிந்தால் மட்டும் நீ என்னை நம்பலாம் என்று கூறியது.

உடனே அத்தனிமை காதலன் கடல் அலைகளிடம் இருந்து கொஞ்சம் தூரம் நகர்ந்து அமர்ந்து  கொண்டு உன்னால் முடிந்தால் என் பாதத்தை உன் அலைகளால் என்னை தொட்டு செல் என்றான்.இதை கேட்ட அலைகள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி வேகமாக அலையடித்து அவன் இரு பாதங்களையும் தொட்டுச் சென்றன.

அமர்ந்திருந்த அவன் திடீரென எழுந்து ஆச்சரியமாக அலைகளை பார்த்து ரசித்து சிரிக்க தொடங்கினான்.

பின்பு அவனுக்கு கடல் அலையின் மேல் அதீக காதலும், நம்பிக்கையும் ஏற்பட்டன. அப்புறம் அலைகளை தன் உறவாய் ஏற்றுக் கொண்டு தன் கனவை கூற தொடங்குகிறான் ஒரு சிறு கவிதை வரிகளுடன்..

  “அலைவுறும் காற்றின் உருவம் கண்டதில்லை

                  அலையின் அழகை ரசித்ததில்லை

                  மனிதர்களிடம் பாச உணர்வை கண்டதில்லை

                 மணி கணக்காய் பேச உறவொன்றுமில்லை

                 காண்பதெல்லாம் கனவு ஒன்றே

              அது நிறைவேறும் நாட்கள் என்றோ

                வழி ஒன்று காட்ட யாவர் வருவார்”?

உடனே அலைகள் நீ சொல்வது ஏதும் எனக்கு புரியவில்லை தனிமை காதலனே! நீ கூற வருவதை எனக்கு புரியும் வடிவில் கூறுவாய் என புலம்பியது.

‘சொல்கிறேன் கேள் சகியே’ என்றான் .

இந்த உலகத்தில் தன் கனவு பயணத்தை நோக்கி  எல்லாரும் போராடுகிறார்கள். சிலருக்கு எல்லாம் இருந்தும் உதவி செய்ய மனம் இல்லாமல்   சுயநலமாக தன் பயணத்தை மேற்கொள்கிறார்கள். சிலர் ஆசை, கனவு இதெல்லாம் இருந்தும் அதையெல்லாம் வெளிபடுத்த முடியாமல் மற்றவர்களின் கனவை நிறைவேற்ற துடிக்கும் நல்ல உள்ளங்கள்.

இந்த சுயநலம் உலகத்திலும் தன் கனவு நிறைவேறாமல் போனலும் பரவாயில்லை மற்றவர்களின் சந்தோசம் தான் தனக்கு நிம்மதி என்று சிலர் நினைக்கிறார்கள். அதை எண்ணையில் பெருமையாக இருக்கிறது என்றான்.

உடனே அவன் அலைகளிடம் உனக்கு என்ன? உன்னை நேசிக்க இந்த உலகத்தில் ஆயிரம் கோடி மக்கள் உன்னை பார்க்க நாள் தோறும் வருகிறார்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம், உன் மேல் எவ்வளவு நம்பிக்கை, ஆசையிருந்தால் இப்படி உன்னை பார்க்க வருவார்கள்.

அவன் சொன்னதை கேட்டவுடன் அலைகள் புயல் வேகத்தில் வீசி கல கலவென சத்தத்துடன் சிரிக்க ஆரம்பித்தது. ஏன் அவ்வளவு மகிழ்ச்சி எனக்கும் சொன்னால் நானும் சிரித்து மகிழ்வேன் சகியே என்று கூறுகிறான். அலைகள் மீண்டும் சிரித்து கொண்டே காரணத்தை கூற தொடங்குகிறது. என்ன தான் என்னை கோடி மக்கள் நேசித்தாலும் ,என் மேல் அவர்களுக்கு காதல் இருந்தாலும் ,அதுவும் அவர்களின் சந்தோசத்திற்கு மட்டும் தான் நேசிக்கிறார்களே தவிர என்னையும்  ஒரு உயிராய் யாரும் மதிப்பதில்லை.

இந்த உலகத்திலேயே மிக பெரியது என்ன தெரியுமா? நாம்  மற்றவர்களின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.ஆனால் இங்கு என்னை சந்திக்க வருபவர்கள் என்னை நேசித்தாலும் ஒரு பயத்துடன் தான் என்னை காண்பார்கள்.

என்ன சொல்கிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான். அலைகள் உடனே நான் உனக்கு புரியும் வகையில் சொல்கிறேன் கேள் தனிமை காதலா. சரி சொல் சகியே என்றான். நான் எங்கு அவர்களை என் ஆழ்கடலுக்கு அடியில் இழுத்து சென்று விடுவேனோ என்ற பயத்தில் தான் இங்கு பல பேர் யோசிப்பார்கள். ஓஹோ அதுவும் சரி தான் என கூறினான்.

இவ்வுலகில் நீ யாரையாவது நம்புகிறாயா? என்று அலைகள் கேட்டது. ஆம் சகியே  நம்புகிறேன். என்ன தான் நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்ததாலும், நமக்கொன்று கிடைக்கையில் அது கிடைக்க கூடாது என நினைப்பவர்கள் தான் அதிகம். இவ்வுலகத்தில் நான் அனைவரையும் நேசிக்கிறேன். ஆனால் என்னை நேசிக்கும் ஒரு ஜீவன் யார் என்றால் என் அப்பா

                “சிவபெருமான் “ஒருவரே .

ஏன் உன் மேல் மட்டும் அவருக்கு அவ்வளவு அன்பா? இல்லை கருணையா என்று அலைகள் கேட்டது.

இப்போது மட்டும் அல்ல நான் கலங்கி நின்ற ஒவ்வொரு தருணத்திலும்” கலங்காதே மகனே “ என்று என் கண்ணீரை துடைக்க  அவர் கரம் தந்து அருள் புரிந்த ஒருவர் என் அப்பா ஆதி பரமேஸ்வரன் ஒருவரே.

எனக்கு ஒரு சந்தேகம் தனிமை காதலா? கேள் சகியே! எனக்கு தெரிந்தால் உன் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன்.

உயிர்களை படைக்கும் கடவுள் ஏன் அவ்வுயிர்களை சில காலம் ஆனதும் இம்மண்ணிலிருந்து பிரித்து செல்கிறார்.

உயிர்களாய் துடிக்கும் ஒவ்வொரு உயிரினங்களும் இம்மண்ணில் வாழ்வதும், இயற்கை ஏந்துவதும் அவர் அவரின் “கர்ம வினைகளே “ஆகும் .

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் அவருக்கே சொந்தமான உறவுகள் தான். அவற்றை அழிப்பதற்கும் , காப்பதற்க்கும் முழு உரிமை அவருக்கே உள்ளது. சிறந்த கர்மத்தால் சிலர் சிறப்பாக வாழ்கிறார்கள், சிலர் அவர்களின் பாவத்தால் அழிந்து போகிறார்கள் சகி என்று சொல்லி முடித்தான்.

மிக்க நன்றிகள் தனிமை காதலா. ஆமாம் நீ கடவுளை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே! உனக்கென்ன கடவுள் மேல் அவ்வளவு பக்தியா?

நான் பிறந்ததிலிருந்து எதன் மேல் ஆசைப்பட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து நான் என்னோட கனவாக மட்டுமல்லாமல் என் வாழ்க்கை பயணமே என்றாவது ஒருநாள் நான் சிவபெருமானை நேரில் பார்த்திட மாட்டேனனா, அவருடன் பேசிட மாட்டேனானு நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இதை நான் என்னோட கனவாக மட்டுமில்லாமல் என் வாழ்க்கையோட இலட்சியமாக நினைத்து தொடர்கிறேன்.

இந்த ஜென்மத்தில் அவரை நான் எப்படியாவது பார்க்கனும் அதற்காக யாரும் எனக்கு உதவி செய்ய முன் வருவதில்லை. என் கனவு என்னவென்று இப்பயணர்கள் பல நபரிடம் கூறியுள்ளேன்.என் கனவை கேட்டதும் எனக்கு அவர்கள் வைத்த பெயர் பைத்தியக்காரன் என்று.

மிக்க நன்றிகள் தனிமை காதலா. ஆமாம் நீ கடவுளை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே! உனக்கென்ன கடவுள் மேல் அவ்வளவு பக்தியா?

நான் பிறந்ததிலிருந்து எதன் மேல் ஆசைப்பட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து நான் என்னோட கனவாக மட்டுமல்லாமல் என் வாழ்க்கை பயணமே என்றாவது ஒருநாள் நான் சிவபெருமானை நேரில் பார்த்திட மாட்டேனனா, அவருடன் பேசிட மாட்டேனானு நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இதை நான் என்னோட கனவாக மட்டுமில்லாமல் என் வாழ்க்கையோட இலட்சியமாக நினைத்து தொடர்கிறேன்.

இந்த ஜென்மத்தில் அவரை நான் எப்படியாவது பார்க்கனும் அதற்காக யாரும் எனக்கு உதவி செய்ய முன் வருவதில்லை. என் கனவு என்னவென்று இப்பயணர்கள் பல நபரிடம் கூறியுள்ளேன்.என் கனவை கேட்டதும் எனக்கு அவர்கள் வைத்த பெயர் பைத்தியக்காரன் என்று.

பிறகு கடற்கரைக்கு அக்காதல் ஜோடிகள்அனைவரும் மகிழ்ச்சியாக  வருகின்றன.அவர்களை பார்த்ததும் அங்கிருந்து கடலை விற்றுக்கொண்டு ஒரு சிறுவன் வந்தான் . அவன் தனிமை காதலனை பார்த்து இப்போது மட்டும் அல்ல எப்போதுமே நீ நினைப்பது எதும் நடக்க போவதில்லை .நீ காண்பது அனைத்தும் கனவில் தான் நடக்கும் ஒருபோதும் நினைவில் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி கிண்டல் செய்து சிரித்தான். அவன் சொன்னதை கேட்டவுடன்  காதல் ஜோடிகளும் சிரித்தனர்.

இதை கண்ட அலைகள் திடீரென புயலாய் உருவாகி அலைகள் சிவலிங்கம்  வடிவத்தில் தோன்றி அங்கிருக்கும் அனைவரையும் ஆசிர்வதித்து  ஆச்சரியத்தில் ஆழ்த்தி சிவலோக பயணத்தில் மூழ்கடித்தது.

அச்சிவலிங்கம் அத்தனிமை காதலனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கூறு மகனே. உன் கனவுகளை நான் நிறைவேற்றுகிறேன் என்று கூறியது.

உடனே “அப்பா “என்று அழைத்து விட்டு லிங்கத்தை நோக்கி வேகமாக ஓடி கட்டி அணைத்து கொண்டு ஆனந்தத்தில் அழுகவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் கண்கள்  கலங்கிய

படி ஆனந்தத்தில் கட்டி அணைத்த படியே சிவபெருமான் அவனை நீருக்கு அடியில் தன் மடியில் சுமந்து கொண்டு அவர் உலகத்தை சுற்றி காட்டத் தொடங்கினார்.

ஒரு பகலும், இரவு முழுவதும் அத்தனிமை காதலனை தன் மார்பால் அணைத்து கொண்டே உறங்க வைத்தார் சிவபெருமான். பிறகு கடற்கரைக்கு சுற்றுலா வந்து பயணிகள் அனைவரும் கடலையே ஒரு நாள் முழுவதும்  பார்த்து கொண்டு சிவபெருமானை”ஓம் நமசிவாய “என்ற மந்திரத்தை உச்சரித்து  வழிபட்டு  வந்தனர்.

அந்நாள் முழுவதும் அத்தனிமை காதலன் நினைத்த படியே மக்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தனர். அதை தன் கண்களால் பார்த்த பிறகு தன் கனவுகள்  நிறைவுற்ற சந்தோசத்தில்  மறு நாள் அதிகாலையில் கடற்கரையோரம் அதிசய ஒளிர்வுடன் அத்தனிமை காதலன் மட்டும் கடற்கரையை வந்தடைந்தான்.

பிறகு அதை கண்ட பயணர்கள் அவனை கடவுளாக நினைத்து வணங்கினார்கள். அதை கண்ட அவன் அவர்களிடம் நீங்கள் நினைப்பது போல் நான் கடவுள் அல்ல.

கடவுள் என்பவர் ஒருவரே என்று கூறி விட்டு வீடு திரும்பினான் அத்தனிமை காதலன். பிறகு பயணர்கள் அக்கடற்கரைக்கு சுற்றுலா வருவதை மறந்து தன் மன நிம்மதிகாகவும், தன் கஷ்டங்களை அலைகளிடம் கூறி மன அழுத்தத்தை குறைத்து கொள்ளவே பலரின் பயணம் “பிராத்தனை மையமாக” மாறத் தொடங்கியது.

அத்தனிமை காதலனுக்கு உதவி செய்ய முன் வந்தவர்கள் மானிடர்களும் அல்ல! அலைகளும் அல்ல! அவனுக்கு உதவி செய்ய முன் வந்த ஒரே ஜீவன் அவன் நம்பும் “ஆன்மீகம்” ஒன்றே.

                 

              “கடவுள் தூணிலும் இருப்பார்

                              துரும்பிலும் இருப்பார்…

என்ற வரிகளை இக்கதையின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.  

“காத்திருந்தால் தன் கனவுகள் மட்டும் அல்ல ! 

        தம் வாழ்கையிலும் வெற்றி நிச்சயம் கிட்டும் “

 

                          அன்பே சிவம்!...


வான்மதி 

திருச்சி .

 

Post a Comment

2 Comments