kamba ramayanam explanation in tamil | கம்பராமாயணம் பாடல்கள் விளக்கம்

Ramayana: A Journey into the Heart of Ancient India

 பால காண்டம்



இதிகாசம் என்றால் என்ன? 

இதிகாசம்  என்ற பகுப்புகளில் இராமாயணம்  ஓர் இதிகாசமாகும். இதிகாசம் என்ற  சொல் ‘இது   முன்   இவ்வாறு   இருந்தது’  என்னும்  பொருள்   உடையது.


பாயிரம் என்றால் என்ன?

இலக்கியத்தில்  பாயிரம் என்பது (கிட்டத்தட்ட) அறிமுகம் ஆகும் பண்டையத்  தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போன்று  அமையும் பகுதியே பாயிரம் ஆகும். 

இதற்கு வேறு பெயர்கள் முகவுரை - பதிகம் - அணிந்துரை நூன்முகம் - புறவுரை - தந்துரை - புனைந்துரை  நன்னூல் சூத்திரத்தில் உள்ளது. 


கடவுள் வணக்கம்


 *கலிவிருத்தம்

கலிவிருத்தம்  என்றால் என்ன?                      இதன் அளவடிகள் நான்கு (சீர்) கொண்டிருக்கும். அதில் எதுகைமுனை  அமைந்திருக்கும். நான்கு அடிகளிலும் சந்த ஒழுங்கு இடம் பெற்றிருக்கும்.


( 1)


உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்


நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா


அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்


தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே


 உலகம் யாவையும்-எல்லா உலகங்களையும்

தம் உளஆக்கலும் -தாம் தம்   சங்கற்பத்தால்  படைத்தலையும்;

நிலை   பெறுத்தலும் - நிலைத்திருக்குமாறு  காப்பதையும்;

நீக்கலும் -அழித்தலையும்;

 நீங்கலா. அலகு  இலா  விளையாட்டு உடையார்  -  என்றும்   முடிவுறாததும் அளவற்றதுமாகிய  விளையாட்டாக உடையவராகிய;

அவர்  தலைவர் - அவரே   தலைவ   ராவார்; 

அன்னவர்க்கே  நாங்கள்   சரண்  - அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்



துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய்

 உலகங்களுமாய்.

இன்பம்இல் வெம்நாடு ஆக்கி. இனியநல்

   வான் சுவர்க்கங்களுமாய்.

மன்பல உயிர்களும் ஆகிப் பலபல

   மாய் மயக்குகளால்

இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப்

   பெற்று ஏதும் அல்லல் இலனே.


படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய மூவகை  அருந்தொழில். பரமனுக்கு   மிக   மிக   எளிது   என்பதை  ‘விளையாட்டு’   என்ற சொல் குறிக்கிறது.






 (2)


சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை


எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றனுள்


முற் குணத்தவரே முதலோர் அவர்


நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ.


 சிற்குணத்தர் - மெய்யறிவினராகிய கடவுளின்;     

தெரிவு அரு நல் நிலை-தெரிந்து கொள்ளுதற்கு அரிய நல்ல தன்மை;         

எற்கு  உணர்த்த அரிது   -   என்னால்   எடுத்துரைத்து   உணர்த்தல்   அரியதாகும்.

(ஆயினும்);

எண்ணிய  மூன்றனுள் - சான்றோர்களால்   எண்ணப்பட்ட சத்துவம். பலராலும் கூறப்படும் மூன்று குணங்களுள்.

முற் குணத்தவரே முதலோர் அவர் - (மேன்மையான குணத்தை உடையவரே தேவர்களில் முதல்வர் ஆவர்)

நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ - (அவரது மங்கள குணங்கள் என்னும் கடலில் மூழ்குதல் நமக்கு நன்மையாகும்).


இப்பாடல் விளக்கம் :- 

அந்த மூன்று வகை குணங்கள்  அவை தாமசம், இராஜ, சாத்வீகம் என்பதாகும்.

தாமசம் குணம் என்பது சோம்பலுக்குரிய  குணமாகும். சோம்பல், அறியாமை, மன சோர்வு,மந்தத்தன்மை,  சுயநலம் போன்ற  குணங்களும் , பிறர் வெறுக்கும் வகையில் தீய எண்ணங்களும் , செயல்களும் நிறைந்ததாக இருப்பவை  அனைத்தும்  தாமசக் குணத்திற்கு உடையதாகும்.  தாமச குணத்தில் முக்கியமான ஒன்று  தர்மம் கிடையாது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் நினைப்பு மட்டுமில்லாமல்  அதற்காக பிறரை அழிக்க வேண்டும் அது ஒன்றும் தவறுயில்லையென்றும். தவறு என்ற பாகுபாடே இல்லாத ஒரு கீழ் தனமான  குணம்  தாமச குணம். உடல் சார்ந்த தேவைகளே இந்த குணத்தின் பயனாகும். உண்ணுவது, உறங்குவது, உடலுறவு என்ற பெயரில் இனப்பெருக்கத்தை பெருக்குவது. என்றே வாழ்க்கை முறை இந்த குணத்தில் அதிகமாக  இருக்கும். இவையெல்லாம்  தாண்டி வாழ்வின் சூட்சமங்களை அறிய  இக்குணம் கண்டுக்கொள்ள முற்படுவதில்லை.




குணங்கள் தொடரும்…..









Tags : #Ramayana, #Hinduepic, #LordRama, #Sita, #Hanuman, #Ravan, #dharma, #karma, #bhakti, #Hindumythology, #Indianculture, #ancientIndia

Explore the captivating world of Ramayana, a timeless epic that chronicles the life of Lord Rama, his devotion to duty, and his unwavering love for his wife Sita. Immerse yourself in the rich cultural heritage of India and discover the profound lessons embedded within this sacred text.

Disclaimer:- அனைத்து உள்ளடக்கங்களும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. தொழில்முறை மருத்துவ ஆலோசனை, ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக உள்ளடக்கத்தை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் உள்ளடக்கம் பார்வையாளர்களை தொழில்முறை உறவில் ஈடுபடுத்தாது.

 



Post a Comment

0 Comments