Story competition result | சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்

 


சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


#HappyTamilNewYear

வீட்டிலே தனித்திருப்போம் 

ஆர்பரித்து வரவேற்று 

ஆனந்தமாக கொண்டாடுவோம் சித்திரை திருமகளை!!! 

தமிழ் சொந்தங்கள் சர்வமும் சிவமயம் சார்பாக அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் புதிய விடியல் ஒளிவீசிட வளமும் நலமும் பெருகிட வாழ்த்துகள்.



தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறுகதைப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் சர்வமும் சிவமயம் சார்பாக அனைவருக்கும் நன்றி , 


அனைவரும் எங்களிடம் பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகள் ....! 

பரிசுதொகை சொற்பமாக உள்ளது என்று ..!


 அனைவருக்கும் என்னுடைய ஒரே பதில் எழுத்துக்களுக்கு என்றுமே பரிசுத்தொகை அளவிடமுடியாதது... 

எழுத்துகள் சமுத்திரம் போன்றது அதற்கு பரிசு இன்னொரு சமுத்திரமே ..! தற்போது 

போட்டி நிறைந்த உலகில் இந்த பதிப்பகம் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது .., இனிவரும் காலங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது அதில் எங்களால் முடிந்த அளவுக்கு நிதி திரட்டி பின்வரும் போட்டிகளில் அதை பூர்த்தி செய்வோம் என்று உறுதி அளிக்கிறோம். 

இருந்தபோதிலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எங்கள் சார்பாக மனமார்ந்த நன்றி.


அனைத்துக் கதைகளையும் படித்தவுடன் எழுந்த உணர்வு வர்ணிக்க முடியாத வார்த்தைகள்.   விதவிதமான நடைகளில் அடுத்தடுத்து சிறுகதை தமிழில் வாசிப்பதே மாபெரும் மகிழ்ச்சியை அளித்தது.


சிலவற்றில், ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இருந்தாலும், நோக்கி மட்டும் செல்லும் நடை , கதை சொல்லும் முறை, மேலோட்டமான முடிவு,  தர்க்கம் போன்ற வழக்கமான குறைகளால் அவை முழுமை பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.


வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக சர்வமும் சிவமயம் தேர்வு செய்த சிறுகதைகள் இதோ,.


அன்னை ஒரு ஆலயம் - நிரோஜினி வரதராஜன் 


அன்புக்கு கலங்கமில்லை -  லட்சுமி 


அலைகளுடன் சிவலோக பயணம் - வான்மதி 


அன்பு கீறல் - ஹரிணியா பிரசாந்தன்


அருந்தவட் புதல்வன் - ராஜசேகரன் 


(திருமணம் நிச்சயிக்கப்பட்டது 

ஆண்மை ~ பெண்மை) - மலர்விழி மணியம் 


இயற்கையின் சிறப்பு - சத்திய பானு 


இடம்பெயர்வு - செல்வக்குமார் 


இழந்தபின் ஏங்காதே - புவித்ரா தேவராசு 


இப்படியும் ஒரு தண்டனை - மணிமாலா மதியழகன் 


ஊமை வெயில் - முகில் தினகரன் 


காற்றாலையில் -தமிழ்ச்செல்வி ராஜராஜன் 


கோடி கௌரவர் கூடி நிற்கும் - தேவிகா குலசேகரன்


சரியான கணக்கு - கற்பகம் 


சிங்கப்பெண்ணே - தேவிகா பாலகிருஷ்ணன் 


சுஜாதாவின் நூறு நண்பர்கள் -மு.ஸர்பான் 


பசியே என்னை பார்க்காதே - தமிழ்மதி 


பயணத்தின்போது நான் கண்ட சொப்பனங்கள் - ஜீவிதா முருகேசன் 


மலர்கள் மலரட்டும் -  மீனாட்சி அண்ணாமலை 


மாலாவின் மாற்றம் - முனைவர் ராஜலட்சுமி 


வந்தேமாதரம் -  முனைவர் லட்சுமி அய்யர் 


வழக்கம்போல் ஊறுகாய் - பத்மகுமாரி 


தர்மமே தலை - மதன் 


ஆண்மை தவறேல்  & தீமைக்குள்ளும் சிறு நன்மை - சுப்புராஜ் 



தேர்ந்தெடுத்த அனைத்து சிறுகதைகளையும் எழுத்தாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு,

அமீரகம் தமிழ் சங்க செயலாளரும் எழுத்தாளர் மகேந்திரன் நண்பர் சிவாகுரு அனுப்பினோம். இவற்றுள் பரிசுக்குரிய சிறுகதைகளாக அவர்கள் தேர்ந்தெடுத்தது.


மாலாவின் மாற்றம் - முனைவர் ராஜலட்சுமி  ; 


அருந்தவட் புதல்வன் - ராஜசேகரன்  ; 


மலர்கள் மலரட்டும் -  மீனாட்சி அண்ணாமலை  ; 


வந்தேமாதரம் -  முனைவர் லட்சுமி அய்யர்  ; 


ஊமை வெயில் - முகில் தினகரன் 


பரிசுக்குரிய சிறுகதையாக சர்வமும் சிவமுயம் குழு தேர்ந்தெடுத்தது ராஜலெட்சுமியின்  ‘ மாலாவின் மாற்றம்‘.




மூன்று பரிசுகள் அறிவித்திருந்தோம் ஆனால் ஐவரும் ஒரே நேர்கோட்டில்  இருப்பதால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசை கூடுதலாக வழங்க முடிவு செய்து இருக்கிறோம் .  


பரிசு பெற்ற எழுத்தாளர்கள் ஐவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.



மேலும் அனைத்து கதைகளும் புத்தகமாக வெளியீடும் வரைக்கும் வேறு எங்கும் அனுப்பக்கூடாது என்று நினைவுபடுத்துகிறோம். மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் மின்னஞ்சலில் சான்றிதழ் இந்த மாத இறுதிக்குள் அனுப்பபடும் .. மற்றும் பரிசுப் பெற்ற நபர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் IFSC Code இந்த damomech92@gmail.com  மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம் .. 


இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எங்கள் சார்பாக மனமார்ந்த நன்றி.




Post a Comment

3 Comments

  1. பசியே என்னை பார்க்காதே எனும் என் சிறுகதையை குறிப்பிட தகுந்த கதையாக குறிப்பிட்டதே எனக்கு அங்கீகாரம் தான். உங்கள் பதிப்பகம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. 'கோடி கௌரவர் கூடி நிற்கும்...'என்ற எனது சிறுகதையினை தெரிவு செய்ததற்கு மிக்க நன்றி! பரிசு பெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட அனைத்து கதாசிரியர் இழுக்கும், சர்வம் சிவமயம் குழுவினருக்கும், நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றி! - தேவிகா குலசேகரன்

    ReplyDelete
  3. சர்வமும் சிவமயம் நடத்திய சிறுகதைப் போட்டியில் என்னுடைய அருந்தவப்புதல்வன் சிறுகதை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய சிறுகதையைத் தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், சர்வம் சிவமயம் நிர்வாகிகளுக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். நன்றி. வணக்கம். அன்புடன் க. இராஜசேகரன்.

    ReplyDelete