tamil short story about village | கிராமத்து சிறுகதைகள்

             ஆட்டு மந்தை





நான்கு வயது ஆண் குழந்தை சட்டை மட்டும் அணிந்து கையில் ஒரு தட்டை ஏந்தி பல்லில் கடித்துக் கொண்டு அழுதான்.பின்னால் அவன் அம்மா நாகம்மாளும் வந்தாள்.இரண்டு கரும்பலகைகள் அதில் குழந்தைகளுக்காக கல்வி சார்ந்த வசனங்கள் முன்னால் ஒரு அறை பின்னால் இரண்டு அறை பழுதடைந்து இருக்க பத்து குழந்தைகள் உள்ளே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தாமரைச் செல்வி டீச்சர்

ஒரு பந்தினை எடுத்து டேய்……. 

செல்ல குட்டி கன்னு குட்டி

இங்கே பாரு…… பந்து குழந்தைகளோடு விளையாடிக் கொண்டு இருக்க நாகம்மாள் வந்தாள்.

டீச்சர்….. டீச்சர்……

பால் பாண்டியை உள்ளே கூப்பிடுங்க…..

தினம் இங்கு கூட்டு வந்து விடுங்க

எங்க டீச்சர்

நான் காடு கரைகளுக்கு போயி விடுவேன். என் வீடுக்காரும் வேலைக்கு  போயிருவாரு. என்ன பண்ணுறது நேரம் எங்கே இருக்கு.

கோழி கூப்பிட எழுந்து காடுக்கு போன பொழுது சாய தான் வீட்டுக்கு 

வாரேன் காடு போன காடு வீட்டு வந்தா வீடு இப்படித்தான் பொழப்பு போகுது.

டேய்….  பாண்டி  ஓடி வா……

 தாமரைச் செல்வி டீச்சரை பார்த்துக் சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டான்.

சுடு தண்ணீரை காய வைத்து மாவை (சத்துணவு மாவு) போட்டு பிசைந்தார்கள். கையில் உருண்டையாக திரட்டி குழந்தைகளுக்கு கொடுக்க 

தீபா டீச்சர் கரும்பலகையை நோக்கி ABCD, ஆத்திச்சூடி, திருக்குறள் 1,2,3, வரிசை எண்கள் எழுதினாள். குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும்  எவ்வித உரையாடல்களும் இருப்பதாக தெரியவில்லை.

பால் வாடிக்கு எதிரே மாட்டு வண்டிகள், இரவு நேரத்தில் கேலிகள், ஆயிரம் விமர்சனங்கள், கதைகள் இளைஞர்களுக்கு பொழுது இங்கே தான் விசலானமான இடம்.

ஒரு வட்டம் போட்டு அதன் உள்ளே பம்பரத்தை வைத்து கையில் பம்பரத்தை எடுத்து கயிற்றில் சுற்றி வட்டத்தினுள்ளே இருக்கும் பம்பரத்தின்மேல் அடிப்பார்கள். பம்பரத்தின் மேல் படும். சிலர் அடிக்கும் போது மட்டையாகி விடும். மட்டையானல் உள்ளே வைக்கவேண்டும்.

செல்லமுத்து பம்பரத்தை சுற்றிவிட்டான். ஒரே அடி பம்பரம் இரண்டாக பிழிந்து போய்விட்டது.

ஒக்காலி

உனக்கு எவ்வளவு மோன.

இப்ப வை டா.

செல்லமுத்து பம்பரத்தை கையில் எடுத்து சுற்ற கையில் நடுவில் வைத்து சுற்றிக் கொண்டே இருந்தது. பக்கத்தில் பெரிய பூவரசம் மரம் அதன்கிளைகளை கீழே பரப்பிக் கொண்டே இருக்க அதன் அடியில் குண்டு விளையாடுவார்கள். சற்று தள்ளி துரையண்ணன் பெட்டிக்கடை.

துரையண்ணணே…

ஒரு சிகரெட் கொடு

பத்து ரூபாய் கொடுப்பா.

அண்ணே நாளை தாரேன் காசு இல்ல கணக்குல எழுதி வச்சுக்கோ. சின்னையா சொன்னான். சிகரெட் வாங்கி மரத்திற்கு பின்னால் சென்று சிகரெட் உள்ளே இருக்கும் துகள்களை இடது கையில் தட்டினான் பேப்பரில் காகிதத்தில் மடித்து வைத்திருந்த பொட்டணத்தை எடுத்து சிகரெட் துகளுடன் போட்டு நன்றாக கசக்கினான் இடது கையில் இருக்கும் துகளை சிகரெட்டை வலது கையில் பிடித்து நன்றாக ஏத்தி பற்ற வைத்தான்.         

 4 இழுப்பு சின்னையா கண் எல்லாம் சிவந்து போயி இருக்க

“போனால் போகட்டும் போடா”….

பாடலை பாடினான். பல பேருக்கு இதுதான் மருந்துக்கடை துரையண்ண்ன் கடைதான்.    

 இரவில் பூவரச மரத்தை பார்க்க பயமாக தான் இருக்கும்.

அடர்த்தியான மரம். பல தலைமுறைகளை கண்ட மரம். ஆட்டு மந்தையை சுற்றி போஸ்ட் மரத்தில் இருக்கும் மஞ்சள் விளக்கு பிரகாசமாக எரிந்துக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் வீடுகள், கொஞ்சம் செடிகள், பன்னிகள் கூட்டம்.

அம்மா.

என்னடா…. வயிறு வலிக்குது ஆட்டு மந்தைக்கு போடா. இருட்டா இருக்குமா. இருடா வாரேன்னு சொல்லி சோத்தை இறக்கி வைத்து விட்டு ஓடி வந்தாள் நாகம்மாள். மஞ்சள் நிழல் வெளிச்சத்தில் டவுசர் அவித்து அம்மாவிடம் கொடுத்து விட்டு அமர்ந்தான். பால்பாண்டி சுற்றி பார்த்தான்.

எல்லாமே விட்டைகள், பின்னால் பன்னி நிற்க எழுந்து தள்ளி உட்கார்ந்தான். பன்னி அதனை தின்றது, கழுதை விட்டை, பால்வாடியின் எதிரே தான் இத்தனை விட்டைகள் விட்டைகளை சுற்றி வீடுகள்  மாட்டுவண்டிகள் மீது அமர்ந்து இளைஞர்கள் தோட்டா போடுவார்கள் இந்த பாதை வழி போக தான் மனிதர்கள் போயி வாரங்க ஆட்டுமந்தை அப்படியே தான் இருக்கு. ஆட்டு மந்தையன்னு ஊரில் யாரிடமும் கேட்டால் சரியாக சொல்லுவார்கள். எங்க ஊருக்கு இதுதான் ஆட்டுமந்தை. இங்கு ஆடுகள் இல்லவே இல்ல. பெரிய விலாசமான இடம்.

மா. மணிகண்டன்,

தமிழாசிரியர்,

கோம்பை

உத்தமபாளையம் வட்டம்

தேனி மாவட்டம்.

Manikandanmani0015@gmail.com



Post a Comment

0 Comments